வாழைக்காய் பொடிமாஸ்
தேவையான பொருட்கள்
வாழைக்காய் - 1
தேங்காய்த் துருவல் (புதியது) - 2 மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 1/2 தேக்கரண்டி
இஞ்சி - 1/2 தேக்கரண்டி
வெங்காயம் (தேவையானால்) - 1/4 கிண்ணம்
எலுமிச்சம்பழச் சாறு - 1 தேக்கரண்டி
தாளிப்பதற்கு கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
சமையல் எண்ணெய் - 1 தேக்கரண்டி

செய்முறை

வாழைக்காயை முழுதாகப் பிரஷர் குக்கரில் 2 விசில் வேகவைக்கவும். ஆறியபின் தோலை உரித்து காரட் துருவுவது போல் துருவிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டுக் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொண்டு, பச்சைமிளகாய், இஞ்சி, தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை, வேண்டுமானால் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். தேவைக்கேற்ப உப்புப் போட்டு நன்றாகக் கலந்து, சிறிது நேரம் அடுப்பில் வைத்துப் பின்னர் இறக்கி 1 தேக்கரண்டி எலுமிச்சம் பழச்சாறு கலந்து மூடி வைக்கவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com