'சாந்தி - ஓர் அமைதிப் பயணம்' என்னும் சேர்ந்திசை நிகழ்ச்சியை மார்ட்டின் லூதர் கிங் கொயலிஷன் கொரால், புனித ஜான் யூனிட்டேரியன் சர்ச், சின்சினாட்டி பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இது மே 1, சனிக்கிழமை மாலை 7 முதல் 9 வரை கிரேட் ஹால் - TUCயிலும், மறுநாள் புனித ஜான் யூனிட்டேரியன் சர்ச், சின்சினாட்டியிலும் அரங்கேறும். Worldfest-20004 (உலகக் கலாச்சாரங்களின் ஒருவாரக் கொண் டாட்டம்) என்பதன் ஒரு பகுதியாக நடத்தப்படுகிறது சாந்தி.
இசைக்கலைஞர் கன்னிக்ஸ் கன்னி கேஸ் வரன் (பார்க்க: http://www. templenet.com) ஒஹையோ கலைக்கழகத்தின் ஒரு நிதியளிப்பின் மூலம் தயாரித்தது பல்லூடக நிகழ்ச்சியான 'சாந்தி-ஓர் அமைதிப்பயணம்'. 5000 ஆண்டுப் புராதனப் பாரதக் கலாச்சாரத்தைச் சித்தரிப்பதன் மூலம் உலக மக்களின் தொடர்புகளை, பழைய உச்சாரணங்களைப் புதிய இசைப் புனைவில் சொல்லும் முயற்சி இது.
இந்தச் சேர்ந்திசையில் சுமார் 80 இசைஞர்கள் ஒத்திகை பார்த்து வந்தாலும் இது வெவ்வேறு பின்னணியிலிருந்து வரும் 110 பாடகர்கள், 16 பேர் கொண்ட கருவியிசைக் குழுவினர் ஆகியோரின் மொத்தப் படைப்பாகும். இவற்றின் நடத்துனர் பிரபல கேதரைன் ரோமா.
மேலதிக விவரங்களுக்கு: Gaja Karyala: 513 731 4427
இணையத் தளம்: http://www.shantichoir.org |