'கலாட்டா'வுக்கு வாங்க!
உதவும் கரங்கள் - வளைகுடாப் பகுதி தமிழ்மன்றம் வழங்கும் தமிழ்ப் புத்தாண்டு பல்சுவை நிகழ்ச்சி 'கலாட்டா'!

தாய்நாட்டுக் கலாசாரத்தையும், கேளிக்கை களையும் உங்களுக்குக்குக் கொண்டு வருகிறது உதவும் கரங்களும், வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றமும் இணைந்து வழங்கும் 'கலாட்டா'. ஏப்ரல் 10ஆம் தேதி கப்பர்லி மையம் (பாலோ ஆல்டோ) அரங்கைக் கலகலக்கச் செய்யும்.

காலையில் கர்நாடக இசையுடன் தொடங்கி, பாரம்பரிய நடன நிகழ்ச்சியோடு தொடர்ந்து, மகளிர் மட்டும் பட்டிமன்றத்தை நோக்கிப் பயணப்படும். பட்டிமன்றத்தில் வாதிட விருப்பமா? கோலப்போட்டியில் கைவண்ணம் காட்ட வேண்டுமா? இல்லை, உங்கள் வீட்டு வாண்டுவுக்கு 'நட்சத்திர' அந்தஸ்து வேண்டுமா? விவரங்களுக்கும், முன்பதிவு செய்யவும்: www.galaata.org

நாட்டுப் புறக்கலையான கலையான வில்லுப்பாட்டை மீட்டுக் கொடுக்கப் போகிறது கலாட்டா. கேட்டுக் களிக்க வாருங்கள். திரைப்படப் பாட்டுக்கு எதிர்ப் பாட்டெடுத்து மேடை ஏறுங்கள். இல்லை கோலிவுட் வினாடிவினாவில் பங்கேற்று பரிசுகளை அள்ளுங்கள்.

நீங்கள் அடைந்து கிடப்பதை விரும்பா தவரா? வெளியே விழாத்திடலில் இன்னும் ஏராளமான கலாட்டா உண்டு. முகங்களில் வர்ணம் பூசிக் கொள்ளலாம். மருதாணி இட்டுக் கொள்ளலாம்.

குழந்தைகளுக்கு கலாச்சாரத்தைப் புதுமையுடன் கலந்தூட்டும் நிகழ்ச்சிகளும் உண்டு. சிந்தைனையைக் கூர்மையாக்க 'சிறுவர் வினாடிவினா'. அவர்களின் வாதிடும் திறன் வலுக்க 'சின்ன வக்கீல்'. அவர்கள் தங்கள் கலாச்சார வேர்களை அறிந்துணரத் 'தெருக்கூத்து'. 'கால்கட்டுப் போட்டி' உண்டு. திருமணத்தைக் குறிப்பிடவில்லை. உங்கள் துணையின் கால்களை உங்களோடு கட்டியபடி இலக்கை அடையும் போட்டியிது.

மற்றும் வாலிபர்களுக்காகவே எலுமிச்சை-கவனம் அல்லது ஸ்பூன்லிங், உடனடி-ஊமைப்பேச்சு போன்ற நவீனப் போட்டிகள் உங்களைக் கட்டிப்போடும். புகைப்படம் பிடித்துக்கொள்ளலாம்; கிளிப்பேச்சு கேட்டு மகிழலாம். இதெல்லாம் போதாதா! நாவிற்கும் விருந்து படைக்க அபிமான உணவகங்கள் கலாட்டாவில் பங்கேற்கவிருக்கின்றன.

நாள் முழுதும் ஆடிக் களைத்த உங்களுக்குப் புத்துணர்ச்சிதர மாலையில் வருகிறது பல்லவி இசைக்குழு. செவிகளுக்கு மட்டுமல்ல, உங்களை எழுந்து ஆடவைத்து உங்கள் கால்களுக்கும் விருந்து தரும் பல்லவி.

உல்லாசமாக ஒரு நாளைக் கழிப்பதோடு இல்லாதவருக்கும் உதவுகிறீர்கள் இந்த நிகழ்ச்சி மூலம். வாருங்கள், உங்களுடைய கரமும் உதவும் கரமாகட்டும்.

இணையத் தளம்: www.galaata.org
www.bayareatamilmanram.org
நுழைவுச்சீட்டு: $10 கலாட்டா மட்டும்
$15 கலாட்டா + பல்லவி
நாள்: ஏப்ரல் 10, 2004. 11 AM to 9.30 PM
இடம்: Cubberly Center, Palo Alto.

© TamilOnline.com