எல்லாப் படங்களிலும் கதாநாயகனுக்குத் தங்கை வேடங்களிலேயே நடித்து வந்த உமாவுக்கு 'தென்றல்' படத்திற்குப் பின் யோகம். நல்ல பாத்திரங்கள் இவரைத் தேடி வருகின்றன.
'நகுலன்' படத்தில் நவநாகரிகப் பெண்ணாக நடிக்கிறார் உமா. தென்றலில் தனக்குக் கிடைத்த நல்ல பெயர் நகுலன் படத்திலும் கிடைக்கும் என்கிறார். இந்தப் படத்தின் கதை கொஞ்சம் வித்தியாசமானதாம்.
'நகுலன்' பாதி ஹிட்லர். ராமனே சீதையைச் சிறை எடுக்கிற மாதிரி கதை என்று கதைக்கருவைக் கூறும் உமா, இவருக்கும் கதாநாயகன் செந்தமிழுக்கும் யார் நடிப்பில் அதிகக் கைதட்டல் பெறுகிறார்கள் என்று போட்டி என்கிறார்.
உமா வேறு யாருமில்லை - இன்றைய அம்மா நடிகையும், அன்றைய கதாநாயகியுமான சுமித்ராவின் மகள். பதினாறு அடி பாய்ந்தால் என்ன ஆச்சரியம்!
கேடிஸ்ரீ |