அறுவைச் சிகிச்சை
அறுவைச் சிகிச்சை நடத்து முன்னால் ஏன் மயக்க மருந்து தராங்க தெரியுமா? டாக்டர்கள் பேசிக்கறது உங்களுக்கு காதுல விழக்கூடாதுன்னுதான். உங்க காதுல விழக்கூடாத சமாசாரங்கள் ஒரு பட்டியலே இருக்கு. மாதிரிக்குச் சிலது:

நான் இந்த ஆபரேஷன் பண்ணினதில்லதான். பின்ன எப்பதான் தெரிஞ்சிக்கறதாம்?

யாருய்யா நாயை உள்ள விட்டது? இதய மாற்றத்துக்கு வெச்சிருந்த இதயத்தை தூக்கிட்டுப் போயிடுச்சு. திங்கறதுக்குள்ள வாய்லேருந்து பிடிங்கிட்டு வா.

என்னய்யா, கத்திய இப்படித்தான் இந்த அழுக்குத்தரையில வெச்சுத் தீட்டறதா?

மூடித் தச்சுடாதே. என் மோதிரம் உள்ள விழுந்திடுச்சு. தேடி எடுக்கணும்.

கிட்னில நல்ல காசு. இவனுக்கு ரெண்டு எதுக்கு?

இதை இப்படியே ஒரு அரை மணி நிறுத்திட்டு, அண்ணாமலை தொடரைப் பாத்திடலாமா?

மின்வெட்டா! போச்சு போ. இனிம எப்ப கரண்டு வந்து...

இவன் செக்ஸ் சேஞ்சு ஆபரேஷனுக்கு வரலைன்னு இவ்ளோ லேட்டா சொல்ற!

'சர்ஜரி பார் டம்மீஸ்' புத்தகம் வெச்சிருந்தேனே. இருவத்தெட்டாம் பக்கத்தக் காணும். யாரு கிழிச்சது?

என்ன? மயக்க மருந்து தீந்துருச்சா? அந்தக் கட்டையால மண்டையில தட்டி முழிப்பு வராம பாத்துக்க.

இவனைக் கொளுத்தணுமா, பொதைக்கணுமான்னு கேட்டுக் கையெழுத்து வாங்கினீங்களா?

இந்தப் பயதான் டாக்டர் ஜோக்கு எழுதறவன். இன்னிக்கே இங்கயே ஒரு வழி பண்ணிறலாம்...

அரைமயக்கத்தில் கேட்டு எழுதியவர்:

எல்லே சுவாமிநாதன்,
லாஸ் ஏஞ்சலஸ்

© TamilOnline.com