தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் எம்.ஜி. ராமச்சந்திரனின் உருவச்சிலையும், முரசொலி மாறனின் உருவச்சிலையும் கடந்த டிசம்பர் மாதம் 7ம் தேதி மற்றும் 8ம் தேதிகளில் திறக்கப்பட்டது.
இவ்விழாவில் கலந்து கொள்ள வருமாறு குடியரசுத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத், பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள்
பிரதமருமான வாஜ்பேயி, முன்னாள் துணைப்பிரதமர் எல்.கே.அத்வானி ஆகியோருக்கு அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் இவ் விழாவில் பிரதமர்
மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
நாடாளுமன்றத்தில் மாநிலங்களவைக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள சுமார் 9 அடி உயரமுள்ள எம்.ஜி.ஆர் சிலையை மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி திறந்து வைத்தார்.
இச்சிலையை வடிவமைத்த சிற்பி மணி நாகப்பாவுக்கு ஜெயலலிதா பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்.
நாடாளுமன்ற வாளாகத்தில் நடைப்பெற்ற விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டு முரசொலி மாறனின் ஆளுயரச் சிலையை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் தமிழக அமைச்சர்கள், தி.மு.கவைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கு காங்கிரஸ் தலைவர்
சோனியாகாந்தி, மக்களவைத் தலைவர் சோமநாத் சாட்டர்ஜி, குடியரசு துணைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத், எல்.கே. அத்வானி, மத்திய அமைச்சர்கள் டி.ஆர். பாலு, தயாநிதி மாறன்
மற்றும் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளுஅம்மாள், முரசொலி மாறன் அவர்களின் மனைவி மல்லிகா ஆகியோர் கலந்து கொண்டனர். 9 அடி உயரமுள்ள முரசொலி மாறன் சிலையை
மத்திய கப்பல் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சர் டி.ஆர்.பாலு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
தொகுப்பு: கேடிஸ்ரீ |