இன்னும் இரண்டு குவார்ட்ட்ர்
எனது நண்பர் விடுமுறைக்கு சென்னை சென்றுவிட்டு திரும்ப கலிபோர்னியா வந்த போது தன் தகப்பனாரையும் கூட்டிவந்திருந்தான். அவரைப் பார்க்க எனது நண்பன் வீட்டுக்குச் சென்றேன். காரை அவன் வீட்டுப் பக்கம் நிறுத்த இடம் இல்லாததால் தள்ளி மீட்டர் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு வந்தேன். நேரம் தெரியாமல் பேசிக்கொண்டிருக்கும் போது, "அடடா இரண்டு குவார்ட்டர் தான் போட்டேன்! அது போதாதே.." எனச் சொல்ல, என் நண்பன், '’இன்னும் இரண்டு குவார்ட்டர் போட்டுவிட்டு வா’’ எனச் சொல்ல அவனது தகப்பனால் முகத்தில் ஒரு பீதியுடன் எங்களைப் பார்த்தார். சில வினாடிகள் எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு சட்டென்று பொறி தட்டி நாங்கள் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தோம்.

தமிழ்நாட்டில் 'குவார்ட்டர் போடுதல்' என்றால் சாராயம் குடித்தல் என்று அர்த்தம். அமெரிக்காவில் குவார்ட்டர் என்பது நம்ம ஊர் இருபத்தி அஞ்சு காசு மாதிரி என என் நண்பனின் தகப்பனாருக்கு விளக்கிச் சொன்னோம்.

ஹெர்கூலிஸ் சந்தரம்

© TamilOnline.com