ஆச்சி வருகிறார் அலியாக
ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த சாதனை நாயகி ஆச்சி மனோரமா. கதாநாயகியாக அறிமுகமானாலும், நகைச்சுவை நடிகையாகவே பிரபலமானார். கிட்டத்தட்ட 4 தலைமுறை நடிகர்களுடன் நடித்தது தமிழ்த் திரையுலகில் பெரிய சாதனை.

'கவிதை கேளுங்கள்' என்கிற படத்தில் இதுவரை நடித்திராத ஒரு பாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் மனோரமா. அவரது நீண்ட நாளைய ஆசையான அலி வேடம் இப்படத்தில் நிறைவேறுகிறது. இப்படத்தின் இயக்குநர் 'மலைச்சாரல்' இந்திரன்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com