மனைவி: ஏன் இப்படி 'லோ', 'லோ'ன்னு கத்திக்கிட்டே இருக்கீங்க?
கணவன்: 'பின்ன என்ன? நம்ப பாங்க் பாலன்ஸ் 'லோ', என் சம்பளம் 'லோ', இன்னிக்கு நீ வெச்ச சாம்பார்லே உப்பு 'லோ', நம்ப பையன் பரிட்சையிலே கிரேடு 'லோ', போதுமா?''
ஒருவர்: இது என்ன கூட்டத்திலே ஒரே பாட்டிமாரா வந்திருக்காங்க?
மற்றவர்: நான் சொன்னேன் கேட்டியா? 'பட்டிமன்றம்'னு பேப்பரிலே போடறதுக்கு பதிலா, 'பாட்டி மன்றம்'னு தப்பாப் போட்டுட்டாங்களாம்!''
ஒரு தொண்டர்: என்ன நம் தலைவரு ஒரே பச்சை மிளகாயாக் கடிச்சு சாப்பிடறாரு?
இன்னொரு தொண்டர்: அதுவா? இன்னிக்கு பொதுக்கூட்டத்திலே எதிர்க்கட்சித் தலைவரைப் பத்தி காரசாரமா பேசணுமாம்.''
ஹெர்கூலிஸ் சுந்தரம் |