''அப்பா... நாம எப்போப்பா நம்ம ஊருக்குப் போவோம்?"
''சீக்கிரம் போயிடலாம் கண்ணு...''
''சீக்கிரம்னா?''
'கொஞ்சம் பணம் சம்பாதிச்சப்புறம்.''
''கொஞ்சம்னா எவ்ளோப்பா?''
''ஒரு வீடு வாங்கற அளவுக்கு.''
''வீடுதான் இருக்கேப்பா?''
''அது சின்ன வீடு கண்ணு. நீயெல்லாம் பெரியவனானப்புறம் அந்த வீடு பத்தாதுல்ல... அதனால கொஞ்சம் பெரிய வீடா வாங்கணும்.''
''பெரிய வீடு வாங்கறதுக்கு நிறைய பணம் வேணுமில்லப்பா?''
''ஆமாம் செல்லம். நிறைய வேணும்தான். அதனால நிறைய சம்பாதிக்கணும். ஒரு கார் கூட வாங்கணும்.''
''இதெல்லாம் வாங்கிட்டா போயிடலாமாப்பா?''
''ம்ம்... நகை அது இதுன்னு கையில கொஞ்சம் சொத்தும் சேர்க்கணும் தங்கம்.''
''கொஞ்ச நாள்ல சொத்து சேர்த்துடலாமாப்பா?''
''கொஞ்சம் வருஷம் ஆகும் செல்லம்.''
25 வருடம் கழித்து...
''தாத்தா, நாம எப்போ நம்ம ஊருக்குப் போவோம்?''
சுனிதா தீனதயாளன் |