கோதுமை மாவு பூரி லாடு
தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - 1 கிண்ணம்
தண்ணீர் - 1/2 கிண்ணம்
சமையல் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையானது
சர்க்கரை - 1 கிண்ணம்
நெய் - 1/4 கிண்ணம்
ஏலப்பொடி - ஒரு சிட்டிகை
முந்திரிப்பருப்பு - ஒரு பிடி

செய்முறை

கோதுமை மாவைத் தண்ணீருடன் சேர்த்து நன்றாக அழுத்தி கெட்டியாகப் பிசையவும். சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பின்னர் ஒவ்வொரு உருண்டையையும் கோதுமை மாவில் தோய்த்து மெல்லியதான அப்பளங்களாக இட்டு எண்ணெயில் போட்டு கரகரப்பாகப் பொரித்து எடுத்து எண்ணெயை வடிய விடவும்.

இந்த அப்பளங்களை நொறுக்கி மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடி செய்யவும். சர்க்கரையை மிக்ஸியில் பொடியாக்கி ஏலப்பொடி சேர்த்து பூரிப்பொடியுடன் கலக்கவும்.

நெய்யைச் சூடாக்கி இதில் கொட்டி, வறுத்த முந்திரிப்பருப்பையும் கலந்து சூட்டுடன் உருண்டை பிடிக்கவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com