ஜூன் 20, 2004 அன்று மாலை நாலு மணிக்கு சான் ஹொசே மெக்ஸிகன் ஹெரிடேஜ் அரங்கில் அபிநயா நடனக் குழுமம் வழங்கும் 'அசைந்தாடும் கவிதை' (Abhinaya Dance Company's 'Poetry in Motion') நடைபெறும்.
தாகூரின் வங்காளிக் கவிதைகள், ஒரியா, மராத்தி, குஜராத்தி, சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் அமைந்த பாடல்களை நடனத்தில் அபிநயிப்பர். கலை இயக்குநர் மைதிலி குமார் தனித்தும், குழுமத்தின் கலைஞர்களான ராதிகா கண்ணன், சத்யஸ்ரீ யெண்டலூரி, ரசிகா குமார், மாளவிகா குமார், சுவாதி புச் ஆகியோருடன் இணைந்தும் நடனங்கள் வழங்குவார்.
விரிகுடாப் பகுதியின் கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானி இசைக்கலஞர்களான ஆஷா ரமேஷ் (குரலிசை), என். நாராயணன் (மிருதங்கம்), சாந்தி நாராயணன் (வயலின்), ராஜா சிவமணி (வீணை), ராகவன் மணியன் (புல்லாங்குழல்), ரவி குடாலா (தபேலா), பீட்டர் வான் கெல்டர் (சிதார்) ஆகியோர் பக்கம் வாசிப்பர். இரண்டு பாணி இசையிலும் தேர்ந்தவரான ஆஷா ரமேஷ் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
நுழைவுக் கட்டண விவரம்: புரவலர் - $ 20; பொது - $ 15; முதியோர்/மாணவர் - $10; நால்வர் கொண்ட குடும்பம் (2 பொது /2 முதி/மாண) - $ 45.
கூடுதல் விவரங்களுக்கு: அபிநயா நடனக் குழுமம்: 408.983.0491 abhinaya_sj@yahoo.com
அல்லது காசோலையும் சுயவிலாசமிட்ட உறையும் அனுப்புக: Abhinaya Dance Company, 52 Harold Avenue, San Jose CA 951117.
நிகழ்ச்சி நடைபெறும் இடம்: Mexican Heritage Theater 1700 Alum Rock Avenue San Jose, CA 95116. |