தமிழகத்தில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கும் 'ஆட்டோகிரா·ப்' இயக்குநர் சேரனுக்கு மிகப்பெரிய திருப்புமுனை. அதிலிருந்து 'ஆட்டோகிரா·ப்' போல் கதை செய்ய நிறைய தயாரிப்பாளர்கள் கோடம்பாக்கத்தை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
'ஆட்டோகிரா·ப்' தெலுங்கில் செய்யப்பட இருக்கிறது. ஆரம்ப காலப் பள்ளிக்கூடக் காதலியாக வந்த மாளவிகாவுக்குத் தெலுங்கிலும் அதே கமலா பாத்திரம்தானாம். நிஜத்தில் மாளவிகா ப்ளஸ் டூ மாணவி. தெலுங்கில் நடிக்க ஒன்பது லட்சம் சம்பளம் என்று சினிமாவட்டாரத்தில் பேச்சு. தமிழில் சிநேகா நடித்த பாத்திரத்தில் பூமிகாவும், சேரன் பாத்திரத்தில் தெலுங்கில் புகழ்பெற்று விளங்கும் ரவிதஜாவும் நடிக்கவிருக்கிறார்கள்.
அங்கேயும் ஆட்டோகிரா·ப் சக்கைப் போடு போடுமா?
தொகுப்பு: கேடிஸ்ரீ |