இளம் கதாநாயகர்கள் வரிசையில் இன்று முன்னணியை நோக்கி சென்று கொண்டிருப்பவர் சூர்யாதான். வரிசையாக இவர் நடித்த படங்கள் வெற்றி தந்திருக்கின்றன. 'காக்க காக்க', 'பிதாமகன்' போன்ற படங்களில் சூர்யாவின் நடிப்பு பிரமிக்க வைத்தது என்றால் பேரழகனில் இரண்டு வேடங்களில் ரொம்பவும்தான் கலக்கியிருக்கிறார்.
கூன் விழுந்த முதுகும், முன்வாய் பற்களுமாக ஒரு சூர்யாவும், பாக்சராக இன்னொரு சூரியாவும் மனிதர் அமர்க்களம் போங்கள். சிவாஜிக்குப் பிறகு கமல்... இப்போது அந்த வரிசையில் சூர்யாவையும் சேர்க்கலாம்.
'பேரழகன்' சூர்யாவிற்கு மற்றொரு மைல்கல்.
தொகுப்பு: கேடிஸ்ரீ |