ஜூன் 2004: குறுக்கெழுத்துப்புதிர்
குறுக்காக

1. தேர்தலில் சேகரிக்கப்படுவதற்கு முன்பே நந்தவன எல்லைகளுடன்கனவைச் செயல்படுத்து (5)
4. இறுதியில் ஊதப்படுவது தொடங்காமல் மடிப்பு கலைந்து போ (3)
6. ஆங்கில நாவல் தமிழில் தொடங்காத நாள் (3)
7. முனையொடிந்த கத்தி பயம் சூழ வைத்தியர் சொல்லும் கட்டுப்பாடு (5)
8. இராகம் பாதி பாடி கை சேர்க்கும் திருநாள் (4)
9. நிறைய தலையில்லா விசாலி வலுவுள்ளவள் (4)
12. ஆரியருக்கு மாயையைத் தோற்றுவித்ததோ? (2, 3)
14. கீழே கொட்டு, அரபிக்கடலில் போய் விழும் (3)
16. ஆற்றின் நடுவில் ஏசு (3)
17. ஏறக்குறைய பிட்டுதிரும் குழப்பத்தில் திசை மாறு (5)

நெடுக்காக

1. தரிசனத்துக்கு இடையூறாயிருந்தது திருநாளைப்போவார் மனைவியா? (3)
2. பானம் உட்கொள்ள வாடி! ஆகாயத்தில் பறக்கலாம் (5)
3. நிறையபேர் சுமக்கும் பல்லக்கில் இருப்பது (4)
4. கொடுந்திட்டம் கத்தி முனையுடன் சேறாகும் (3)
5. ஏரி அழகு மிளிர் குதிரையோடும் சத்தம் (5)
8. என்றும் பசுமையான நினைவுகளில்லாப் பிராணி? (5)
10. குறிக்கோள் அடைய கட்சி, ஆலயம் இவற்றைத் தொடங்காதீர்! (5)
11. பூவைத் தாங்குவதுவோ திருப்புகழ் தொடங்கிய ராகம் (4)
13. விதுரனின் அண்ணன் வெளிறியவன் (3)
15. பக்தியால் இடுப்பில் கட்டிக் கொள்வது (3)

வாஞ்சிநாதன்
vanchinathan@vsnl.net


விடைகள்

குறுக்காக: 1. நனவாக்கு 4. சங்கு 6. தினம் 7. பத்தியம் 8. பண்டிகை 9. பலசாலி 12. சோம பானம் 14. சிந்து 16. திட்டு 17. திரும்பிடு

நெடுக்காக 1. நந்தி 2. வானம்பாடி 3. கும்பல் 4. சகதி 5. குளம்பொலி 8. பச்சோந்தி 10. லட்சியம் 11. காம்போதி 13. பாண்டு 15. துண்டு

© TamilOnline.com