மே 23 அன்று CET, சான் ஹோசேயில் 20-வது ஆண்டுவிழா நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக மற்றொரு விழா நடந்தது. சோன்யா தலாலின் தங்கக் குரலில் இசைத்த மராத்தி பஜன்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சிக்கு சுவாமி மங்களானந்தா வரவேற்புரை வழங்கினார். அடுத்து ஆஷா ரமேஷ் கர்நாடக இசை பாட, என். நாராயணன் (ஹார்மோனியம்), சாந்தி நாராயண் (வயலின்), ரவி குடாலா (மிருதங் கம்) ஆகியோர் உடனிசைத்தனர்.
மதிய நிகழ்ச்சி சீமா சக்ரபர்த்தி (இயக்குநர், நடராஜா நடனப் பள்ளி) ஆடிய ஒடிஸ்ஸி யுடன் தொடங்கியது. ப்ரியாங்கா மிஸ்ரா, தீப்ஷிகா ராய், பிதிஷா ராய், ஆஷ்மி சக்ர பர்த்தி, ஷ்ரேயா மல்லி, ப்ரியா அஸ்தானா, அமலா ஷெட்டி, சுஷ்மி சக்ரபர்த்தி, சுஸ்ரிதா நியோகி ஆகியோர் உடன் ஆடினர். அடுத்துப் பேசிய வசந்த சித்தப்பா தனது உரையில் சுவாமிகள் கர்நாடக மாநிலத்தில் ஆற்றிய தொண்டுகளை விவரித்தார். அதன்பின் சுவாமி ஓம்காரனந்தா ஆஸ்ரமம் வந்த வழியையும் இன்னும் எதிர்நோக்கி யிருக்கும் பணிகளையும் பற்றி விளக்கினார்.
தியானம், வழிபாடு, ஆன்மீக நூல்கள் படித்தல் இவற்றை அன்றாடப் பழக்கமாக்கிக் கொள்ளவேண்டும் என சுவாமி அறிவுறுத் தினார். அடுத்து விழாக் குழு உறுப்பினரான ஞானேஸ்வர் பிரபு ஆஸ்ரமத்தின் சமுதாயப் பணிகளையும், விழா மலரையும் பற்றிப் பேசினார். விழாமலர் வெளியிட்டபின் அசையாப் படக்காட்சி (slide show) திரையிடப்பட்டது.
ஸ்ரீபாத தோர்வி (தபேலா), நரேந்திர ஜோஷி (ஹார்மோனியம்) இவற்றுடன் அனுபமா தலால் பல மனங்கவரும் பஜனைப் பாடல்களை வழங்கினார். இந்து மதி கணேஷின் நிருத்யோல்லாச நடனக் குழுமத்தைச் சேர்ந்த பன்சி பேதா, அக்ஷயா கணேஷ், ரஞ்சனி லக்ஷ்மிநாராயணம், அஞ்சனா நந்தகுமார், அமுலா நடேசன், ஷில்பா ராஜ், ப்ரியா சங்கர், மனனி ஸ்ரீதரன், தாரிணி சுப்ரமணியன் ஆகியோர் வழங்கிய பரதநாட்டிய நிகழ்ச்சி, வைபவத்துக்கு முத்தாய்ப்பாக அமைந்தது.
விழாக்குழுவின் தலைவரான சதீஷ் தத் கூறிய நன்றியுரையோடு நிகழ்ச்சி நிறை வெய்தியது. |