இருபத்தைந்தாவது ஆண்டில் நடை போடும் சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் அதன் வெள்ளிவிழாக் கொண்டாட்டாங்களின் ஒரு பகுதியாகக் கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி வழங்கும் 'ஆவாரம்பூ' கிராமிய இசை நிகழ்ச்சியை ஜூலை 11, 2004 அன்று ஏற்பாடு செய்திருக்கிறது.
தமிழ் கிராமிய இசையிலே தாலாட்டு, நையாண்டி, தெம்மாங்கு, வில்லுப்பாட்டு எனப் பலவகை உள்ளன. எந்தவித இராக தாளங்களையும் அடிப்படையாகக் கொள் ளாமல், உலகத்தின் வெவ்வேறு அம்சங் களான குடும்ப உறவுகள், இயற்கை, திருவிழாக்கள், கலாசார சம்பிரதாயங்கள், நடைமுறைகள் ஆகியவற்றை எதார்த்த மாகப் புரியவைக்கும் திறமை கிராமத்து இசைக்கே உண்டு. இந்த இசையைக் காதில் கேட்பதைவிட இசை நிகழ்ச்சியை நேராகப் பார்க்கும்போது இன்னும் உற்சாகப்படுத்தும்.
திரைப்படப் பாடல்களின் தாக்கத்தால் மெல்லமெல்ல மறைந்து போய்க் கொண்டிருந்த இந்த இசையை உலக மெங்கும் வலம் வரச்செய்ததில் குப்புசாமி தம்பதியனருக்குப் பெரும்பங்கு உண்டு. மண்ணின் மணம் வீசும் கிராமத்து இசையை அதிவேகத் தொழல் நுட்பத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சிலிகன் பள்ளத்தாக்குவாழ் தமிழர்களிடையே முதன்முதலாக, அதுவும் வெள்ளிவிழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, கொண்டுவருகிறது தமிழ் மன்றம்.
புஷ்பவனம் குப்புசாமி தம்பதியினரின் 'ஆவாரம்பூ' நாள்: ஜுலை 11, மாலை 4 மணி இடம்: Chabot College Auditorium, Hayward, CA. நுழைவுச்சீட்டுகள்: $10, $15. மேலும் விபரங்களுக்கு: www.bayareatamilmanram.org |