மக்களவை கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் நிகழ்த்திய உரையின் போது தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்படும் என்று கூறியது குறிப்பிடத் தக்கது. அதே போல் இந்திய அரசியலமைப் பின் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள எல்லா மொழிகளையும் அரசு மொழியாக அறிவிப்பதற்கு வசதியாக அரசு தனிக்குழுவை நியமிக்கும் என்றும் கூறியுள்ளார்.
தமிழ்மொழி செம்மொழி என்று அறிவிக்கப் பட்டால், உடனடியாக இந்தியப் பல்கலைக் கழக மானியக் குழு அதனை ஏற்று, அனைத்து இந்தியப் பல்கலைக் கழகங் களிலும் தனியாகத் தமிழ்த்துறை உருவாக வழிபிறக்கும். தமிழ்மொழி, கலைகள், இலக்கியம் பற்றிய ஆய்வுகள் அதிகம் வெளிவரும். தமிழுக்கும் தமிழருக்கும் எழுச்சி மிகுந்த எதிர்காலம் அமையும்.
எப்போது இந்தச் செம்மொழி அறிவிப்பு வரும் என்பதுதான் இப்போதைய கேள்வி.
தொகுப்பு: கேடிஸ்ரீ |