மக்களவைத் தேர்தல் முடிந்து புதிய அரசு பதவியேற்று ஒரு மாதம் முடிவடைந்த நிலை யில், மாநிலங்களவைக்கான தேர்தலுக்குக் கட்சிகள் படு சுறுசுறுப்பாகச் செயல்பட தொடங்கின. 14 மாநிலங்களில் இருந்து மொத்தம் 65 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இம்முறை அ.தி.மு.க சார்பாக 4 பேரும், காங்கிரஸ் சார்பாக ஒருவரும், பா.ம.க. சார்பாக ஒருவரும் போட்டியின்றித் தேர்ந் தெடுக்கப்பட்டனர். இதன்மூலம் முதன் முதலா கப் பா.ம.க. மாநிலங்களவையில் நுழைகிறது.
இருக்கும் ஓர் இடத்திற்கான வேட்பாளர்கள் போட்டியில் பல பெயர்கள் அடிபட்டாலும், கடைசியில் ஜெயந்தி நடராஜனுக்கும், சுதர்சன நாச்சியப்பனுக்கும் கடும் போட்டி ஏற்பட்டு, வெற்றி பெற்றது நாச்சியப்பன்தான். ப. சிதம்பரத்துக்குத் தனது தொகுதியை விட்டுக்கொடுத்ததைப் பாராட்டியே சோனியா இந்தப் பரிசைக் கொடுத்ததாகவும் ஒரு பேச்சு உண்டு.
தொகுப்பு: கேடிஸ்ரீ |