தமிழ்ப் பையனாகப் புதுநாயகன் ரவிகிருஷ்ணாவும் வடநாட்டுப் பெண்ணாக சோனியா அகர்வாலும் நடிக்கும்(!) '7ஜி ரெயின்போ காலனி' படம் உருவாகிறது. சென்னை கே. கே. நகரில் அடுக்குமாடியிருப்பு ஒன்றில் ரெயின்போ காலனி கதை ஓடுவதாக படத்தில் காட்சிகள் இடம்பெறுகின்றன. நாயகனும், நாயகியும் கல்லூரி மாணவர்கள். இருவருக்குமிடையிலான காதலைப் பற்றியதுதான் படம் என்கிறார் இயக்குனர் செல்வராகவன். இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்குமாம்.
பெரிய நடிகர்கள் யாரும் இப்படத்தில் நடிக்கவில்லை என்பதைக் கவனிக்கவேண்டும். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
தொகுப்பு: கேடிஸ்ரீ |