திருக்குறள் ஆராய்ச்சிக் கட்டுரைக்குப் பரிசு
பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு சமயத்தில் திருக்குறள் சார்பான ஆராய்ச்சிக் கட்டுரைகள் அடங்கிய நூல் ஒன்றை வெளியிடும் திட்டமிருக்கிறது. இந்த நூலுக்குக் கட்டுரைகள் வழங்க விரும்புவோர் முதலில் கட்டுரைச் சுருக்கம் (Abstract) அனுப்ப வேண்டும். நல்ல, தரமான, அரிய, புதிய கருத் தோடும் ஆராய்ச்சிக் கண்ணோட்டத் தோடும் எழுதப்படும் கட்டுரைச் சுருக்கங்களைத் தேர்ந்தெடுக்கத் தமிழறிஞர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப் பட்டிருக்கிறது. தேர்ந் தெடுக்கப்பட்ட கட்டுரைச் சுருக்கங்களில் உள்ள கருத்துக்களை விரிவான கட்டுரை வடிவத்தில் எழுதி அனுப்புமாறு பின்னர் கேட்டுக்கொள்ளப்படுவார்கள். கட்டுரைச் சுருக்கங்கள்அனுப்ப விரும்பு பவர்கள் கவனிக்க வேண்டியன:

கட்டுரைச் சுருக்கங்களை ஆகஸ்டு 31, 2004-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைச் சுருக்கங்கள் அனுப்பலாம்.

கட்டுரைச் சுருக்கங்களும் தேர்ந் தெடுக்கப்படும் கட்டுரைகளும் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ இருக்கலாம்.

கட்டுரைச் சுருக்கங்களின் இரண்டு நகல்களைக் கீழ் உள்ள முகவரி களுக்கு வாழ்க்கைக் குறிப்பு, முகவரி, தொலைபேசி எண்ணுடன் அனுப்பு தல் வேண்டும்:

Dr. T. Murugarathanam
5, 3rd South Street,Theni Road
Aravaazhi Nagar,
Palkalai Nagar East
Madurai 625 021 INDIA

இரண்டாவதுமுகவரி
Dr. Sornam V. Sankar
5420 Autumn Field Court
Ellicott City, MD 21403
USA

விரிவான கட்டுரைகளை மேலே கண்ட முகவரிக்கு டிசம்பர் 31, 2004-க்குள் அனுப்ப வேண்டும்.

ஆசிரியர்களுக்கு அக்டோபர் 15, 2004க்குள் சுருக்கங்களின் தேர்வுச் செய்தி - உண்டாயின் - தெரிவிக்கப்படும்.

கட்டுரைச் சுருக்கங்களும் கட்டுரைகளும் கணினி வழியாகவோ தட்டச்சு வழியாகவோ அச்சடிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். கட்டுரைச் சுருக்கங்கள் இருபக்க அளவில் இருக்கலாம். விரிவான கட்டுரைகள் பத்து பக்கங்களில்இருக்கலாம்.

நூலில் வெளியிடப்படும் கட்டுரைகளுள் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படும் மூன்று கட்டுரைகளுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.

முதல் பரிசு US$ 1,000;
இரண்டாவது பரிசு US$ 500;
மூன்றாவது பரிசு US$ 300.

பரிசு பெறும் கட்டுரைகள் மதுரையில் இயங்கும் ஞாலத் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம் வெளியிடும் 'தமிழ் ஞாலம்' (The Tamil World) என்ற ஆராய்ச்சி இதழிலும், நூலாகவும் வெளியிடப்படும்.

தேர்வுக்குழு உறுப்பினர்களுடைய கட்டுரைகள் பரிசுக்கு உரியன அல்ல.

கட்டுரை ஆசிரியர்களுக்கு மாநாட்டில் தங்களுடைய கட்டுரையில் உள்ள கருத்துக்களைச் சொற்பொழிவாக வழங்க வாய்ப்பு அளிக்கப்படும். ஆனால், அவர்கள் தங்கள் செலவில்/பொறுப்பில், பிறர் அல்லது பிற நிறுவனங்கள் உதவி பெற்று மாநாட்டிற்கு வருதல் வேண்டும். கட்டுரைஆசிரியர்கள் மாநாட்டிற்குப் பதிவுத்தொகை (Registration fees) செலுத்த வேண்டியதில்லை.

கட்டுரை ஆசிரியர்கள் திருக்குறள் தொடர்புடைய எந்தத் தலைப்பிலும் கட்டுரைகள் வழங்கலாம். கீழே சில தலைப்புகள் சான்றாகச் சுட்டப் படுகின்றன. இந்தத் தலைப்புகளில் தான்கட்டுரை எழுதவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

வள்ளுவர் வகுத்த வாழ்வாங்கு வாழும் வழி (Valluvar on Principle-Centered Living)

வள்ளுவர் காட்டும் வாழ்க்கையின் குறிக்கோள் (Valluvar on Purpose of Life)

வள்ளுவரும் அரசாட்சியும் (Valluvaron Political Governance)

வள்ளுவரும் பொதுத்துறை ஆட்சியும் (Valluvar on Public Administration)

வள்ளுவர் பேசும் நட்பு (Valluvar on Personaland International Relationship)

வள்ளுவரும் தத்துவஞானிகளும் (Valluvar and Other Philosophers and Thinkers of the World)

திருக்குறளும் பெண்ணியமும் (ThirukkuRaLand Feminism)

திருக்குறளும் ஆண் ஒழுக்கமும் (Male Morality and Thirukkural)

திருக்குறளும் இயற்கைச் சூழலும் (ThirukkuRaL and the Environment)

வள்ளுவரும் காதலும் (VaLLluvar on Romance)

இன்றைய வாழ்விற்கு வள்ளுவர் வழங்கும் செய்தி (The Relevance of VaLLuvar to the Modern World)

வள்ளுவரும் இந்தியச் சிந்தனைப் பின்னணியும் (VaLLuvar in Indian Thought Complex)

வள்ளுவர் முப்பாலும் நாற்பாலும் (The Trivarga Purusharthaas (Human goals) of VaLLuvar and the caturvarga Purushaarthaas)

வள்ளுவர் சமயம் (The Religion of VaLLuvar)

வையப் பின்புலத்தில் வள்ளுவர் (VaLLuvar in World Perspective)

மாநாட்டைப் பற்றியோ, இந்த அறிவிப்பைப் பற்றியோ தொடர்பு கொள்ள விரும்புவோர் thirukkural 2005@aol.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். இந்த மாநாட்டிற் காக ஒரு இணையத்தளம் விரைவில் அமைக்கப்படும்.

முனைவர். இர. பிரபாகரன்
ஒருங்கிணைப்பாளர்,
பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு

© TamilOnline.com