தேவையான பொருட்கள்:
வெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் - 1/3 கிண்ணம் சூடான பால் அல்லது தண்ணீர் - 1/2 கிண்ணம் பழுப்பு சர்க்கரை (brown sugar) - 1/4 கிண்ணம் கந்தகம் இல்லாத மொலாசஸ் (unsulphured Mollasses) - 1/4 கிண்ணம் மைதா மாவு - 1 1/3 கிண்ணம் லவங்கப்பட்டை பொடி (cinnamon) - 1/2 தே. கரண்டி ஜாதிக்காய் பொடி (nutmeg) - 1/2 தே. கரண்டி முட்டை - 1 பேகிங் பவுடர் - 1 தே. கரண்டி சமையல் சோடா உப்பு - 1/2 தே. கரண்டி உப்பு - ஒரு சிட்டிகை தோல் சீவி மெல்லியதாக துறுவிய இஞ்சி -1 மேசைக்கரண்டி
செய்முறை:
சர்க்கரையை எண்ணெய் அல்லது வெண்ணெயுடன் சேர்த்து நன்கு குழைக்கவும். இதில் மொலாசஸ் (Mollasses) சேர்த்து கலந்து பின் முட்டையையும் உடைத்து சேர்ந்து கலக்கவும். இத்துடன்
சூடான பால் அல்லது தண்ணீர், இஞ்சி சேர்த்து நன்கு கலக்கவும்.
மைதாமாவு, பேகிங் பவுடர், சமையல் சோடா உப்பு, உப்பு, பழுப்பு சர்க்கரை, லவங்கப் பட்டை, ஜாதிக்காய் பொடி இவற்றை ஒரு பெரிய வாயகன்ற பாத்திரத்தில் போட்டு நன்றாக கலக்கவும். இதை
மொலாசஸ் சேர்த்த கலவையில் சிறிது சிறிதாக சேர்த்து (fold) கலக்கவும்.
இதை மைக்ரொவேவில் சமைக்கக்கூடிய ஒரு வட்ட தட்டு வடிவ (round pan) கண்ணாடி பாத்திரத்தில் விட்டு அதிக திறனில் 8 நிமிடங்கள் சமைக்கவும். நுண்ணலை அடுப்பின் திறனை பொறுத்து
இந்த நேரம் மாறுபடும். கேக்கின் நடுவில் ஒரு மரக்குச்சியை விட்டு பார்த்தால் ஒட்டாமல் வந்ததும் எடுத்து விடவும். அப்படியே சில நிமிடங்கள் வைத்து விட்டு பின்னர் கேக்கை வெட்டவும்.
அமெரிக்க அங்காடிகளில் கந்தகம் இல்லாத மொலாசஸ் (unsulphured Mollasses) கிடைக்கும்.
சரஸ்வதி தியாகராஜன் |