ஜூலை 9 மற்றும் 10, 2005-இல் பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு வாசிங்டன் டி.சி.யில் நடைபெற உள்ளது. இந்த மாநாடு பேரா. வா. செ. குழந்தைசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும். இதில் வட அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், தென் னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து தமிழறிஞர்களும் திருக்குறள் ஆராய்ச்சி யாளர்களும் பங்கேற்பார்கள்.
குறிக்கோள்:
ஆய்வுக் கண்ணோட்டத்தோடு திருக் குறளை அறிந்து கொள்வது
கன்·பூசியஸ், சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், மாக்கியவல்லி போன்ற தத்துவ ஞானி களுடன் வள்ளுவரை ஒப்பிட்டறிவது
வள்ளுவரை நம் சந்ததியினருக்கும், பிற நாட்டு மக்களுக்கும் அறிமுகப் படுத்து வது, வளமான வாழ்விற்கு வள்ளுவத்தில் வழி காண்பது
மாநாட்டின் சிறப்பியல்புகள்:
திருக்குறள் சார்பான சிறப்புச் சொற் பொழிவுகளும் கருத்தரங்கங்களும்
ஆங்கிலத்திலும், தமிழிலும் நடைபெறும்.
பங்குபெறும் மாணவர்களுக்கு கல்லூரி மதிப்பீடு (credits) வழங்க முயற்சிகள் நடை பெறுகின்றன.
மாநாட்டில் திருக்குறள் ஆய்வுக் கட்டுரை கள் அடங்கிய நூல் ஒன்று வெளியிடப் படும்
மாநாட்டைப் பற்றிய பிற விவரங்களுக்கு: www.fetna.org |