கா·பி கேக்
தேவையான பொருட்கள்:

மைதாமாவு - 1 கிண்ணம்
பொடித்த சர்க்கரை - 1/2 கிண்ணம்
பழுப்பு சர்க்கரை (brown sugar) - 1/2 கிண்ணம்
திடீர் காபி பொடி - 2 மேசைக்கரண்டி
(Instant coffee powder)
பேகிங் பவுடர் - 1 தேயிலைக்கரண்டி
சமையல் சோடா உப்பு - 1/2 தே.கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
வனிலா சாறு (எஸன்ஸ்) - 1 தேயிலைக்கரண்டி
முட்டை - 2

செய்முறை:

திடீர் காபி பொடியை இளம் சூடான தண்ணிரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.

மைதாமாவு, பேகிங் பவுடர், சமையல் சோடா உப்பு, உப்பு, பொடித்த சர்க்கரை, பழுப்பு சர்க்கரை இவற்றை ஒரு பெரிய வாயகன்ற பாத்திரத்தில் போட்டு நன்றாக கலக்கவும். சலிக்கவும்

செய்யலாம்.

மற்றொரு பாத்திரத்தில் திடீர் காபி கரைத்த தண்ணீர், வனிலா சாறு (எஸன்ஸ்) இவற்றை விடவும். பின் ஒவ்வொரு முட்டையாக உடைத்து ஊற்றி கலக்கவும்.

இதை வாயகன்ற பாத்திரத்தில் உள்ள மாவு கலவையில் சேர்த்து கலந்து பின் மிக்ஸி அல்லது food processorல் விட்டு 45 வினாடிகள் ஓடவிடவும். கேக் கலவை மிக கெட்டியாக இருந்தால்

பால் சேர்த்து சற்று ஓடவிடவும். பின்னர் இதை மைக்ரொவேவில் சமைக்கக்கூடிய ஒரு வட்ட தட்டு வடிவ (round pan) கண்ணாடி பாத்திரத்தில் விட்டு அதிக திறனில் (High power) 8

நிமிடங்கள் சமைக்கவும்.

நுண்ணலை அடுப்பின் திறனை (Watts) பொறுத்து இந்த நேரம் மாறுபடும். அனுபவத்தில் தெரிந்துவிடும். இந்த மாதிரி கேக்கை நுண்ணலை அடுப்பில் செய்யும் போது நுண்ணலை அடுப்பில்

உபயோகிக்க கூடிய ஒரு trivet-ஐ அடுப்பில் வைத்து அதன் மீது கேக் கலவை உள்ள பாத்திரத்தை வைத்து பேக் (Bake) செய்வது நல்லது. trivet இல்லையென்றால் நுண்ணலை அடுப்பில்

உபயோகிக்க கூடிய ஒரு சாஸரை கவிழ்த்துப் போட்டு இதன் மீது கேக் கலவை உள்ள பாத்திரத்தை வைத்து பேக் (Bake) செய்யலாம்.
பொதுவாக கேக்கை நுண்ணலை அடுப்பில் செய்யும் போது முதல் மூன்று நிமிடங்களுக்குப் பின்னர் ஒவ்வொரு 30 வினாடிகளுக்கு ஒரு முறை திறந்து எப்படி இருக்கிறது என்று பார்ப்பது நல்லது.

அதிக நேரம் சமைத்து விட்டால் கேக் மென்மையாக இருக்காது.

கேக்கை நுண்ணலை அடுப்பில் செய்வது மிகவும் சுலபம் ஆனால் கவனம் தேவை.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com