கொத்துமல்லி சாதம்
தேவையான பொருட்கள்

சாதம் - 2 கிண்ணம்
கொத்துமல்லி (பொடியாக நறுக்கியது) - 1 கட்டு
பச்சைமிளகாய் - 5
உப்பு - தேவைக்கேற்ப
சமையல் எண்ணெய் - சிறிதளவு
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/8 தேக்கரண்டி

செய்முறை

பச்சைமிளகாய், கொத்துமல்லியை உப்புடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுக் கடுகு போட்டு வெடித்ததும், உளுத்தம் பருப்பைப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். பின்னர் இதனுடன் பெருங்காயம் சேர்த்து அரைத்த விழுதைப் போட்டு பச்சைவாசம் போகும்வரை வதக்கி வைத்துக்கொள்ளவும். இதில் தேவையான அளவு எடுத்து சாதத்துடன் நன்றாகக் கலந்து எடுத்து வைக்கவும்.

இது போலவே புதினா சாதமும் செய்யலாம்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com