தேவையான பொருட்கள்
சாதம் - 2 கிண்ணம் கடலைப் பருப்பு - 2 மேசைக்கரண்டி துவரம் பருப்பு - 4 மேசைக்கரண்டி மிளகாய் வற்றல் - 6 பெருங்காயம் - 1/8 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப பூண்டு - 5 நெய் அல்லது நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
செய்முறை
பூண்டு தவிர எல்லாப் பொருட்களையும் எண்ணெயின்றி வாணலியில் வறுத்து, பூண்டுடன் சேர்த்து மிக்ஸியில் பொடி செய்யவும். இந்தப் பொடியை நெய் சேர்த்து சாதத்துடன் நன்கு கலக்கவும். பூண்டுப் பொடி சாதம் தயார்.
சரஸ்வதி தியாகராஜன் |