வெண்டைக்காய் சாதம்
தேவையான பொருட்கள்

சாதம் - 2 கிண்ணம்
பிஞ்சு வெண்டைக்காய் - 15
மாங்காய்ப் பொடி - 1/2 தேக்கரண்டி
வெங்காயம் (நறுக்கியது) - 1/4 கிண்ணம்
சிவப்பு மிளகாய்ப் பொடி - 1/4 தேக்கரண்டி
தக்காளிப் பசை - 2 தேக்கரண்டி
சீரகப் பவுடர் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் பவுடர் - 1/2 தேக்கரண்டி
துருவிய தேங்காய் - 1 மேசைக்கரண்டி
நெய் - 1 மேசைக்கரண்டி
மசாலாத் தூள் (all spice powder) - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - வெண்டைக்காய் வறுப்பதற்குத் தேவையான அளவு
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

வெண்டைக்காயை நீரில் அலம்பி நன்றாகத் துடைக்கவும். இதன் அடியையும் நுனியையும் சிறிதளவு வெட்டி எறியவும். இந்த வெண்டைக்காய்களை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.

பின் சிறிது நெய்யில் வெங்காயத்தைப் போட்டு வதக்கி அதில் எல்லாப் பொடிகளையும் போட்டுப் பிரட்டி, தேங்காய்த் துருவல், தக்காளிப் பசை, உப்பு சேர்த்து வதக்கவும். கடைசியில் வறுத்த வெண்டைக்காய்களைச் சேர்த்து கவனமாக வெண்டைக்காய் உடைந்து விடாமல் சிறிது நேரம் கிளறி இறக்கவும். சூட்டுடன் சாதத்தைச் சேர்த்து நெய் விட்டு அடிமேலாக கிளறி வைக்கவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com