செப்டம்பர் 5, 2004 அன்று மாலை 4 மணிக்கு ராகமாலிகா இசைப் பள்ளியின் இரண்டாவது நிகழ்ச்சியான 'காதம்பரி - இசையின் நறுமணங்கள்' சான்டா கிளாரா லூயிஸ் மேயர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. ராகமாலிகாவின் நிறுவனர் ஆஷா ரமேஷ¤ம், அவரது முதுநிலை மாணவியரும் வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பிரபல ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர் லக்ஷ்மி ஷங்கர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்.
இசையின் பல மணங்களைக் கதம்பமாகத் தொடுத்து வழங்குவது இந்த நிகழ்ச்சியின் நோக்கம். இன்னொரு சிறப்பம்சம், ·ப்ரீமாண்டைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் எழுதிய தமிழ்ப் பாடல்களுக்கு ஆஷா ரமேஷ் இசை அமைத்து, பாடியிருக்கும் குறுந்தகடு (CD) வெளியிடப்படுவது.
1992ல் ராகமாலிகாவைத் துவக்கிய ஆஷா ரமேஷ் சங்கீத கலாநிதி D.K. ஜெயராமன் மற்றும் கானசுதாகரா நங்கநல்லூர் V. ராமனாதன் ஆகியோரின் சிஷ்யை. அமெரிக்காவிலும் இந்தியாவிலும் பல கச்சேரிகள் செய்துள்ள ஆஷா ரமேஷ், இங்கிருக்கும் நடனப் பள்ளிகளுக்காகப் பல பாடல்களுக்குத் தானே இசை அமைத்திருப்பது மட்டுமல்லாமல் சில தில்லானாக்களையும் இயற்றி உள்ளார்.
காதம்பரி நிகழ்ச்சியில் பக்க வாத்தியம் வாசிக்க இருப்பவர்கள் நாராயணன், சாந்தி நாராயணன், விவேக் தாத்தார் மற்றும் அபிநய் பாத்யே. சுருதி சுத்தத்திற்கும், பாவத்திற்கும் பெயர் போன ராகமாலிகாவின் வழங்கும் காதம்பரியின் காதம்பரியின் அனைவரையும் மயங்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
நாள் : செப்டம்பர் 5 நேரம் : மாலை 4 மணி இடம் : லூயிஸ் மேயர் அரங்கம், சான்டா கிளாரா தொடர்பு கொள்ள : சுபா சந்திரன் 408 255 8526 ராகினி ஸ்ரீனிவாஸன் 650 949 1276 ராமானுஜம் 510 353 1790 வஸந்தி ஜெயராமன் 408 257 2590 ராம் சுப்ரமணியம் 408 253 2816 |