சிறுவனும் சுணைச் செடியும் The Boy and the Nettle
A boy was stung by a nettle. It hurt him. ஒரு சிறுவனின் கையில் சுணை குத்தியது. அது வலி எடுத்தது.
He complained to his mother, "I touched it gently, but the nettle stung me hard. It is not fair." அவன் தன் அம்மாவிடம், "நான் அதை மென்மையாகத்தான் தொட்டேன், ஆனால் சுணை என்னை பலமாகக் குத்திவிட்டது. இது என்ன நியாயம்" என்று புகார் செய்தான்.
"It stung you because you touched gently" said his mother. "நீ மென்மையாகத் தொட்டதால்தான் அது குத்தியது" என்றார் தாயார்.
"The next time you touch a nettle, grasp it boldly. It will be soft to your hand, and not hurt you at all." "அடுத்தமுறை சுணைமுள்ளைத் தொடும்போது அதைத் வலுவாகப் பிடி. கைக்கு அது மிருதுவாக இருக்கும், உன்னைக் குத்தவும் செய்யாது."
Whatever you do, do with all your might. செய்வதை முழு பலத்துடன் செய். (குறிப்பு: சுணை என்பது செந்தட்டி போன்ற சில தாவரங்களில் காணப்படும் மெல்லிய முள் போன்ற பகுதி). (Aesop's Fables - ஈசாப் நீதிக் கதைகள்) |