காளான் பக்கோடா
தேவையான பொருட்கள்

காளான் - 15

மசாலா அரைக்க

பூண்டு - 6 பல்
சீரகம் (வறுத்தது) - 1/4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சம்பழச் சாறு - 1 தேக்கரண்டி

மேல் மாவுக்கு
கோதுமை மாவு - 1/4 கிண்ணம்
அரிசி மாவு - 1/4 கிண்ணம்
கடலை மாவு - 1/4 கிண்ணம்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
சமையல் சோடா - 1/4 தேக்கரண்டி
இஞ்சி, மிளகாய் விழுது - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை

மசாலாப் பொருட்களை அரைத்துக் கொள்ளவும். காளானைத் தண்டுப் பகுதியில் வகிர்ந்து கொள்ளவும். சிறிது மசாலாக் கலவையை ஒவ்வொரு காளானின் தண்டுப்பகுதியிலும் அடைக்கவும்.

மேல் மாவுக்குத் தேவையான பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து, பக்கோடா மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் வைத்து சூடானவுடன், காளானை மாவில் தோய்த்து எடுத்துப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

மீனாக்ஷி கணபதி

© TamilOnline.com