டி.ஆர். ராமச்சந்திரன், தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ், தேங்காய் சீனிவாசன் என்று பல தமிழ் நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகராக நடித்திருந்தாலும், தொடர்ந்து அதைச் செய்ய முடியவில்லை. ரசிகர்கள் அவர்களை நகைச்சுவை நடிகர்களாகவே பார்க்க விரும்பியதுதான் அதற்கு காரணம்.
இந்நிலையில் நகைச்சுவை நடிகர் விவேக் 'சொல்லி அடிப்பேன்' என்கிற படத்தின் மூலம் ஆக்ஷன் கதநாயகனாக அறிமுகமாகிறார் என்பதுதான் தற்போது கோடம்பாக்கத்துச் சிறப்புச் செய்தியாகும்.
எஸ்.ஏ. சந்திரசேகரிடம் உதவியாளராக இருந்த எஸ்.ஏ.சி. ராம்கி இப்படத்தை இயக்கவிருக்கிறார். தேவா இசை.
படத்தைப் பற்றி விவேக் கூறுகையில், ''எத்தனையோ இயக்குநர்கள் கதாநாயகனாக நடிக்க என்னிடம் கேட்டனர். ஆனால் சிறப்பான கதை மூலம் சொல்லியடித்தது ராம்கிதான். படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நான் கலக்குவேன் என்பதையும் சொல்லியடிக்கிறேன்'' என்கிறார்.
தொகுப்பு: கேடிஸ்ரீ |