தமிழ் திரையுலகில் அத்தி பூத்தாற் போல 'பாரதி', 'காமராஜர்' போன்ற சில நல்ல திரைப்படங்களும் வருகின்றன. காமராஜ் படத்தை இயக்கிய அ. பாலகிருஷ்ணன் மறுபடியும் சற்று வித்தியாசமான, தரமான படத்தை தரவிருக்கிறார்.
'அற்றைத் திங்கள் அந்நிலவில்' என்பது படத்தின் பெயர்.
தமிழ்த் திரையுலகம் தோன்றி ஏறத்தாழ 75 ஆண்டுகளில் செய்யத் தவறிவிட்ட சங்ககாலத் தமிழரின் வாழ்வையும் பண்பாட்டையும் பதிவு செய்கிறது இத்திரைப்படம்.
தொகுப்பு: கேடிஸ்ரீ |