அக்டோபர் 2004: குறுக்கெழுத்துப் புதிர்
குறுக்காக
4. நெருப்பு வாங்குதலை ஒழித்தால் கெடுதல் (3)
5. (7 குறு. பார்க்கவும்)
7 & 5. கயத்தாற்றில் தொங்கியவன் மறமுள்ள அரசகுலத்தோன் (2,5)
8. இருக்க தேர் செய்ய பொன் தேவை (3, 3)
10. உரியவரிடம் தகவல் சேர இவ்விலாசத்தை எழுதத் தேவையில்லை! (2,4)
11. ராமேசுவரத்திற்கு முன் வரும் புனிதத் தலம்?(2)
12. மலையைக் குடைந்து கோயிலை முடித்தவன் பெருஞ்சண்டைக்காரன் (5)
14. (3. நெடு. பார்க்கவும்)

நெடுக்காக
1. செவ்வாய்ப் பெண்களிடம் மரியாதைகாட்டும் கடை அருகே தரகன்தலை வைப்பதில்லை (6)
2. பன்னிரு காதுகளுடன் ஆசையாய்க் கேட்கும் ராகம்?! (7)
3. & 14. சொந்த சமையல் சிவனுக்கு இடப்புறம் (2,3)
6. தக்க மலை தொடங்க வெளியே ஆற்றைத் தாண்டுவது மலரடி (7)
9. இப்போதைக்குக் கற்காத லிங்கம் ஓரங்களுடன் குழம்பும் (6)
13. தலை நடுவே காலி அணை (2)

வாஞ்சிநாதன்
vanchinathan@gmail.com

சென்ற மாதப் புதிரின் விடைகள்

குறுக்காக:3. குருமா, 5. தள்ளுபடி, 6. சிதை, 7. கதிர், 8. நுகத்தடி, 11. அம்பலம், 12. சகுனி, 14.பாகு, 16. மாலையிட்ட, 17. விலக
நெடுக்காக:1. சுதந்திரம், 2. குளுமை, 3. குடிமகன், 4. மாசி, 9. தங்குமிடம், 10. சுலபமாக, 13. பயில், 15. குவி

© TamilOnline.com