உணவுமுறை | விவரம் | செயல்படும்திறன் | நன்மை | தீமை |
அட்கின்ஸ் | மாவுச்சத்தை அறவே குறைத்து (20-90 grams/day) அளவில்லாமல் புரதம் மற்றும் கொழுப்புச்சத்து உண்பது | அளவில்லாத புரதமும் கொழுப்பும் சேர்க்கலாம் என்றாலும் பசி அடங்கி விடுவதால் உண்ணும் அளவு குறைந்து 1200-1700 கலோரிகளுக்கு மேல் உண்ணமுடியாது. | மாவுச்சத்து அறவே நீக்குவதால் உடலில் சர்க்கரை அளவு குறைகிறது. வேகமாக உடல் எடையும் குறைய வாய்ப்புண்டு | போதுமான அளவு தண்ணீர் குடிக்காது போனால் dehydrate ஆக வாய்ப்புண்டு. கொழுப்புச் சத்து அதிகமாக உண்பதால் இருதய நோய் அதிகரிக்கலாம். Fiber குறைவாக உண்பதால் மலச்சிக்கல் ஏற்படலாம். |
south beach diet | இது கொழுப்பு குறைந்த அட்கின்ஸ் என்று சொல்லலாம். முதல் இரண்டு வாரங்கள் மாவுச் சத்தை அறவே தவிர்க்க வேண்டும். சாதம், சப்பாத்தி, பிரட், கிழங்கு முதல் பழங்கள் வரை ஒட்டு மொத்த மாக மாவுச்சத்தை தவிர்த்தல். அதன் பின் இரண்டாவது நிலையில் குறைந்த அளவில் மாவுச் சத்தை உண்ண ஆரம்பிக்க வேண்டும். வாரம் 1பவுண்டு எடை குறையும் அளவு கலோரிகளும் மாவுச்சத்தும் அனுமதிக்கப்படும். தேவையான எடையை எட்டிய பிறகு மூன்றாவது நிலையில் இன்னும் கொஞ்சம் மாவுச்சத்து அனுமதிக்கப்படும். ஆக எடை கூடாமல் குறையாமல் அதே அளவில் இருக்க உதவும். | முதல் இரண்டு வாரங்களில் உடல் எடை கணிசமாக குறையும். உடலும் தனக்கு தேவையான மாவுச்சத்தின் அளவை கணித்துக் கொள்ளும். | அதிகமான அளவு காய்கறிகள் அனுமதிக்கப்படுகின்றன. மாவுச்சத்தின் கெடுதலை அறிந்து கொள்ள ஏதுவாய் இருக்கிறது. தேவையான அளவு மாவுச்சத்தை மட்டும் உண்பதால் இன்சுலின் அளவு சீரமைக்கப்படுகிறது. | முதல் இரண்டு வாரங்கள் அதிகப்படியாக எடை குறைவதும், மாவுச்சத்து இருக்கும் ஒரே காரணத்தால் சில நல்ல காய்கறிகள் (கேரட், பீட்ரூட்) பழங்கள் தவிர்க்கப்படுவது ஆரோக்கியமானதில்லை. |
sugar Busters Diet | மீண்டும் மாவுச்சத்தை அறவே குறைக்கச் சொல்லும் ஒரு வழி. | அறவே மாவுச்சத்தை குறைப்பதால் உண்ணும் கலோரிகள் அளவு குறைகிறது. | எடை குறைவதில் ஆச்சரியமில்லை. | அப்படி ஒரேடியாக விரதமிருப்பது தேவைதானா என்பதே கேள்வி. |
Enter the Zone | ஒரு நாளைக்கு ஆறு முறை உண்ன வேண்டும். அளவு குறைத்து ஆனால் அடிக்கடி உண்பது அனுமதிக்கப்படுகிறது. | மாவுச்சத்தினால் உண்டாகும் தீமைகள் குறையும். | நீரிழிவு நோய் உடையவர்கள், இன்சுலின் ஊசி எடுத்துக் கொள்பவர்கள் உடலின் சர்க்கரை அளவு குறையாமல் இருக்க அவ்வப்போது சிறு அளவில் உண்பது நல்லதே. | மூன்று முறை உண்ணும் அளவை ஆறு முறை உண்டால் எடை கூடித்தானே போகும்? மிகவும் முக்கியம் உண்ணும் அளவேயன்றி எத்தனை முறை என்பதல்ல. |