ரொட்டி கட்லட்
தேவையான பொருட்கள்

ரொட்டி - 4 துண்டுகள்
உருளைக்கிழங்கு - 2
பிட்ரூட் - 1
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - 1 துண்டு
உப்பு - தேவைக்கேற்ப
முந்திரிப் பருப்புத் தூள் - 1 கிண்ணம்
கொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

செய்முறை

உருளைக்கிழங்கு, பிட்ரூட் போன்றவற்றை நன்றாக வேகவிட்டுக் கட்டியில்லாமல் பிசைந்து கொள்ளவும்.

வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி ஆகியவற்றைப் பொடியாய் நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு அவற்றை வதக்கிக் கொள்ளவும். இதே சமயத்தில் ரொட்டித் துண்டுகளை மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும்.

அரைத்த விழுது மற்றும் வதக்கிய காய்கறிகளுடன் உப்பைச் சேர்த்து ஒன்றாகக் கலக்கவும்.

கறிவேப்பிலை, கொத்துமல்லி போட்டு நன்றாகக் கலக்கி வடைபோலத் தட்டி முந்திரித் தூளை ஒரு தட்டில் போட்டு பரப்பி அதில் வடைகளை இருபுறமும் பிரட்டவும். தோசைக்கல்லில் போட்டு நிறைய இரண்டு புறமும் எண்ணெய்விட்டு மொறுமொறுப்பாக எடுத்து வைக்கவும்.

இது ஒருவித்தியாசமான கட்லட். வெகு சுவையாய் இருக்கும்.

தக்காளி சாஸ் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com