ரொட்டி அப்பம்
தேவையான பொருட்கள்

ரொட்டி - 6 துண்டுகள்
அரிசி - 1 மேசைக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம்
வாழைப்பழம் - 1 துண்டு
வெல்லம் - 1 கிண்ணம்
ஏலக்காய் - 6
நெய் - 1 கிண்ணம்
எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை

அரிசியை ஊறவிட்டுப் ரொட்டியுடன் சேர்த்து தேங்காய்த் துருவல், வாழைப்பழம், வெல்லம் இவற்றுடன் மிக்சியில் மையாக அரைக்கவும். ஏலக்காயும் போட்டு ஒரு சுற்றுச் சுற்றி எடுத்து மாவில் சிறிது நெய் சேர்க்கவும்.

வாணலியில் எண்ணெய் வைத்துக் காய்ந்தவுடன் சிறு கரண்டியில் மாவை ஊற்றிப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

இது மிகவும் சுவையான அப்பம்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com