தேவையான பொருட்கள்
ரொட்டி - 6 துண்டுகள் தயிர் - 2 கிண்ணம் தேங்காய்த் துருவல் - 2 கிண்ணம் பச்சை மிளகாய் - 6 இஞ்சி - 1 சிறிய துண்டு கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி காராபூந்தி - 1 கிண்ணம் கறிவேப்பிலை, கொத்துமல்லி- சிறிதளவு
செய்முறை
ரொட்டித் துண்டுகளை நான்காக வெட்டி, தோசைக்கல்லில் போட்டு எண்ணெய்விட்டு மொறுமொறுப்பாக எடுத்துக் கொள்ளவும்.
தேங்காய், பச்சைமிளகாய், இஞ்சி இவற்றை மிக்சியில் விழுதாக அரைக்கவும். தயிரை உப்புப் போட்டுக் கொஞ்சம் கடைந்து, அரைத்த விழுதைக் கலக்கவும். இதில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளிக்கவும்.
வறுத்து வைத்துள்ள ரொட்டித் துண்டு களைத் தயிரில் முக்கி எடுத்துப் பரவலாகத் தாம்பாளத்தில் தனித்தனியே வைத்து மேலாகவும் தயிர் விடவும்.
காராபூந்தி, கறிவேப்பிலை, கொத்துமல்லி போன்றவற்றை மேலாகத் தூவி அலங்கரிக்கவும்.
தயிர்வடை போலவே சுவையாய் இருக்கும்.
தங்கம் ராமசாமி |