ரொட்டி பஜ்ஜி
தேவையான பொருட்கள்

ரொட்டி - 8 துண்டுகள்
கடலைமாவு - 1 கிண்ணம்
அரிசிமாவு - 1/2 கிண்ணம்
மஞ்சள் பொடி - 1 கிண்ணம்
மிளகாய்ப் பொடி - 1 கிண்ணம்
உப்பு - தேவைக்கேற்ப
ஜீரகம் - 2 மேசைக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை

கடலைமாவு, அரிசிமாவு, உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய்ப்பொடி இவற்றுடன் சீரகத்தை ஒன்றிண்டாகப் பொடித்துப் போடவும்.

பெருங்காயம் போட்டு பஜ்ஜி மாவு கரைத்துக் கொள்ளவும்.

ரொட்டியை நான்கு துண்டுகளாக வெட்டிக் கொண்டு மாவில் தோய்த்து தோய்த்து அடுப்பில் காய்ந்த எண்ணெய்யில் போட்டுப் பொன்னிறமாக வந்தவுடன் எடுக்கவும்.

தக்காளி சாஸ், தேங்காய்ச் சட்னியுடன் சாப்பிட்டால் ஜோராக இருக்கும்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com