மிச்சிகனின் போன்டியாக் பகுதியில் உள்ள பராசக்தி ஆலயத்தில் ஆகஸ்ட் 25-27 தேதிகளில் அஷ்டலக்ஷ்மி விக்ரக யந்திரங்கள் ஆகம விதிப்பட நிறுவப்பட்டன. 25ஆம் தேதியன்று கணபதி ஹோமத்துடன் தொடங்கி பூர்வாங்க வழிபாடுகள் நடைபெற்ற பின் வரலக்ஷ்மி விரத தினமான 27ஆம் தேதியன்று சிலைகள் நிறுவப்பட்டன. மூன்று நாட்களுமே ஏராளமான பக்தர்கள் வந்தபோதும், இறுதிநாளன்று மட்டும் எண்ணிக்கை 700ஐத் தாண்டியிருக்கும். அன்று மாலை அறங்காவலர் தலைவரான டாக்டர் ஜி. கிருஷ்ணமூர்த்தி கோவிலை நிர்மாணிப்பதற்குப் பின்புலமாயிருந்த ஆன்மிக அனுபவத்தை விவரித்தார்.
நவராத்திரி துவங்குவதற்கு முந்தைய நாளான அக்டோபர் 13 வரை மண்டல அபிஷேகம் தினமும் நடைபெற்றது. நவராத்திரி நாட்களில் சண்டி ஹோமம், அன்றாடம் வெவ்வேறு அலங்காரம் மற்றும் கொலு ஆகியவையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. திருக்கோவிலின் துவக்கவிழா நாளான அக்டோபர் 23ஆம் தேதியன்று மஹாசண்டி ஹோமத்துடன் விழா நிறைவுபெற்றது.
அதிக விவரங்களுக்கு: www.parashakthitemple.org
டாக்டர் வெங்கட் ஹரி |