அபிநயாவின் நாட்டிய அரங்கேற்றம்
ஜூலை 31, 2004 அன்று அபிநயாவின் நாட்டிய அரங்கேற்றம் தௌசண்ட் ஓக்ஸ் பகுதியிலுள்ள சிவிக்ஸ் பிளாசாவில் நடைபெற்றது.

சிவசக்தி நடனமும், சாருகேசி வர்ணத்துக்கு அவரது அபிநயமும் மிகவும் நேர்த்தி. ஆனாலும் பாம்பு நடனத்துக்கு அபிநயாவின் உடல் வளைந்து நெளிந்து கொடுத்து ஆடியது, பார்ப்பவர்களைக் கரகோஷம் செய்யவைத்தது. குரு பத்மினி வாசன் பெருமைப்பட நியாயம் இருக்கிறது.

பின்னணியில் பாபு பரமேஸ்வரன் (குரலிசை), டி. விஸ்வநாதன் (மிருதங்கம்), வி.கே. சிவகுமார் (புல்லாங்குழல்), கே. வினோத் (வயலின்) ஆகியோர் அபாரமாக ஒத்துழைத்தனர். இரண்டரை மணி நேரம் எல்லோரையும் தன் அபாரமான ஆட்டத்தால் கட்டிப்போட்ட இந்தச் சிறுமிக்கு நல்ல எதிர்காலம் உண்டு.

இந்திரா பார்த்தசாரதி

© TamilOnline.com