கேன்டன் இந்துக் கோலில் ஞாயிறுதோறும் மதியம் 2.45 முதல் 3.15 வரை தமிழ் வகுப்புகள் நடக்கின்றன. ஆரம்ப நிலை வகுப்புகளில் அகரவரிசையும், பின்னர் அடுத்த நிலையில் எழுத, படிக்க மற்றும் உரையாடவும் பயிற்றுவிக்கின்றார்கள். இந்த மாணவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் சொற்களுக்கு ஒரு தமிழ்-ஆங்கில அகராதியைத் தற்போது தயாரித்து வருகின்றனர்.
தமிழ் வருடப் பிறப்புச் சமயத்தில் ஏதேனும் புதிதாகச் செய்ய முயற்சிக்கிறார்கள். சென்ற முறை இப்பள்ளிக் குழந்தைகள் தமது தாத்தா-பாட்டிக்கு தமிழிலிலேயே கடிதம் எழுதினார்கள். கேட்க வேண்டுமா, அவர்களுக்கு ஒரே சந்தோஷம் தான். ஓரிரண்டு கடிதங்களை நீங்களும் தான் பாருங்களேன். அந்தப் பழக்கம் தொடருகிறது. குழந்தைகளும் மிகுந்த மகிழ்ச்சியோடு அவற்றை வகுப்புக்குக் கொண்டுவந்து காட்டுகிறார்கள்.
வகுப்புகள் இலவசம். மேற்கொண்டு தகவலுக்கு : கேன்டன் இந்துக் கோவில் - 734.981.8730 அல்லது ஹேமா ராமநாதன் - 734.397.4757 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். |