தாகம் கொண்ட மாடப்புறா
The thirsty pigeon

1. ஒரு மாடப்புறா பறந்து கொண்டிருந்தது. அதற்கு மிகவும் தாகம் எடுத்தது. சுற்றிலும் எங்குமே தண்ணீர் இல்லை.
1. A pigeon was flying. It felt very thirsty. There was no water to be seen anywhere around.

2. அங்கே ஒரு விளம்பரப் பலகையில் தண்ணீர் இருக்கும் ஒரு கிண்ணத்தின் படம் இருந்தது. மாடப்புறாவுக்கு அது ஒரு படம் தான் என்று தெரியவில்லை.
2. There was a billboard in which a picture of bowl with water was painted. But the pigeon did not know that it was just a picture.

3. கிண்ணத்தில் இருக்கும் தண்ணீரைக் குடிப்பதற்காக வேகமாகப் போன புறா, விளம்பரப் பலகையில் பலமாக மோதிக்கொண்டது. மோதிய அதிர்ச்சியில் அதன் சிறகுகள் ஒடிந்தன.
3. The pigeon rushed to drink the water in the bowl and hit forcefully against the billboard, breaking its wings in the process.

4. சிறகொடிந்த புறா கீழே விழுந்தது. அங்கே நின்று கொண்டிருந்த ஒருவன் கையில் பிடிபட்டது.
4. The pigeon fell down and was caught by a bystander.

வேகத்தின் காரணமாக விவேகத்தை இழக்கக் கூடாது
Zeal should not outrun discretion.

© TamilOnline.com