A fawn once said to his Mother "You are larger than a dog, swifter, more used to running and you have strong horns. O Mother! How come you are afraid of the hounds?"
ஒரு மான்குட்டி தன் தாயிடம் "நீ நாயைவிடப் பெரியவள், விரைவானவள், ஓடத்தெரிந்தவள், மேலும் உன் கொம்புகள் பலமானவை. ஏன் அம்மா நீ வேட்டை நாய்களுக்கு அஞ்சுகிறாய்?" என்று கேட்டது.
She smiled, and said: "I know full well, my son, that all you say is true."
புன்னகை பூத்துவிட்டுத் தாய்மான் கூறியது: "மகனே! நீ சொல்வதெல்லாம் சரிதான் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்."
"But when I hear even the bark of a single dog I feel ready to faint, and fly away as fast as I can."
"ஆனால், ஒரு நாய் குரைப்பதைக் கேட்டாலே எனக்கு மயக்கம் வந்துவிடுகிறது. நான் விழுந்தடித்து ஓடி விடுகிறேன்."
All the weapons of a coward are of no use.
ஒரு கோழையிடம் எத்தனை ஆயுதங்கள் இருந்தாலும் பயனில்லை.
(Aesop's Fables-ஈசாப் நீதிக்கதைகள்) |