பருப்புத் தீர்த்தம்
தேவையான பொருட்கள்

பயத்தம் பருப்பு - 1/2 கிண்ணம்
வெல்லத்தூள் - 3/4 கிண்ணம்
தேங்காய்ப் பால் - 1/2 கிண்ணம்
ஏலப்பொடி - 1 தேக்கரண்டி

செய்முறை

பயத்தம் பருப்பை லேசாக சூடுவரும்வரை வறுத்து, குக்கரில் வேகவிடவும். பருப்பு குழைவாக வெந்ததும் வெல்லத்தூள், தேங்காய்ப் பால், ஏலப்பொடி சேர்த்துக் கலக்கவும். சற்றுத் தளர்வாக இருக்க வேண்டும்.

இது மிகவும் ஆரோக்கியமான எளிய வகை உணவாகும்.

இந்திரா காசிநாதன்

© TamilOnline.com