வெல்லக்கூட்டு
தேவையான பொருட்கள்

சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 3 அல்லது 4 (சுமார் அளவு)
வெல்லப்பொடி - 3/4 கிண்ணம்
தேங்காய் தூள் - 1/2 கிண்ணம்
ஏலப்பொடி - 1 தேக்கரண்டி

செய்முறை

சர்க்கரை வள்ளிக்கிழங்கைச் சிறுசிறு துண்டுகளாக்கி வாணலியில் போட்டுக் கால் கிண்ணம் தண்ணீர் ஊற்றவும். அவ்வப்போது கிளறி குழைய வேகவிடவும்.

கிழங்கு வெந்ததும் வெல்லப்பொடி போட்டுச் சிறிது நேரம் கழித்துத் தேங்காய், ஏலப்பொடி கலந்து கீழே இறக்கவும். தேவையானால் சிறிதளவு அரிசி மாவு தூவலாம்.

இந்திரா காசிநாதன்

© TamilOnline.com