தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 1 கிண்ணம் அரிசி மாவு - 1/2 கிண்ணம் வெல்லப்பொடி - 3/4 கிண்ணம் ஏலப்பொடி - 1/4 கிண்ணம் நெய் - 5 தேக்கரண்டி
செய்முறை
வெல்லத்தூளைத் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கரைக்கவும். கோதுமை மாவு, அரிசி மாவு, தேங்காய், ஏலப்பொடி இவற்றை வெல்லத் தண்ணீரில் கலக்கவும்.
தோசை மாவுப் பதத்தில் கரைக்கவும். அடுப்பை நிதானமாக எரிய விடவும். தோசைக்கல் காய்ந்ததும் அரை தேக்கரண்டி நெய் ஊற்றி, தோசை மாவை ஊற்றி, லேசாகப் பரப்பவும். தோசையை சுற்றியும் சிறிதளவு நெய் விடவும்.
பிறகு தோசையைத் திருப்பிவிட்டுப் பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும்.
இந்திரா காசிநாதன் |