வெல்ல அவல்
தேவையான பொருட்கள்

கெட்டி அவல் - 1 கிண்ணம்
வெல்லத்தூள் - 1/2 கிண்ணம்
தேங்காய்த் தூள் - 1/4 கிண்ணம்
ஏலப்பொடி - 1 தேக்கரண்டி

செய்முறை

அவலை களைந்து சுமார் 1 மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

அடி கனமான பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் விட்டு வெல்லப் பொடியைப் போடவும். வெல்லம் கரைந்ததும் மண், தூசி இவற்றை வடிகட்டி மீண்டும் கொதிக்க விடவும். இதில் தேங்காய்த் தூளைச் சேர்க்கவும்.

ஊறிய அவலைத் தண்ணீர் இல்லாமல் வடிகட்டவும்.

வெல்லம் கரைந்து நீர் சுண்டியதும் அவலைப் போட்டு நன்றாகக் கிளறி ஏலப்பொடி போட்டுக் கலந்து கீழே இறக்கவும்.

இந்திரா காசிநாதன்

© TamilOnline.com