மாயாவதியின் மாய வெற்றி
உத்திரப்பிரதேசத்தில் பெரும்பான்மை பெற்று அரசு அமைத்துள்ள மாயாவதி, பதவி ஏற்றுக் கொண்ட உடனேயே அதிரடி அரசியலை ஆரம்பித்து விட்டார். பதவி ஏற்ற உடனேயே கிட்டத்தட்ட 250 அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தர விட்டிருக்கும் அவர், பழிவாங்கும் நடவடிக்கை கள் எதிலும் ஒருபோதும் இறங்கமாட்டேன் என்றும் அறிவித்திருக்கிறார். அவருக்குக் கிடைத்திருக்கும் 206 எம்.எல்.ஏ.க்களின் வெற்றி அவருக்குப் புதிய தெம்பைக் கொடுத்துள்ளது. அதே சமயம் அவரது இணையற்ற வெற்றி முலாயம் சிங் யாதவுக்கும் அமர்சிங்குக்கும் அச்சத்தை விளைவித் திருக்கிறது. முந்தைய அரசின் காலத்தில் அனில் அம்பானிக்கு நிலம் ஒதுக்கப்பட்டது தொடர்பான விசாரணையை அவர் தொடங்கியிருப்பது, சிலர் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. திடீரென சமாஜ்வாதி, பாரத ஜனசக்தி கட்சிகளில் இருந்து இரண்டு எம்.எல்.ஏக்கள் விலகி மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்திருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரவிந்த் சுவாமிநாதன்

© TamilOnline.com