விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் நடிகர் ஸ்ரீகாந்த். மணப்பெண் வந்தனா ஒரு எம்.பி.ஏ. பட்டதாரி. ஜூன் 18ம் தேதி சென்னையில் திருமணம்.
'ரோஜாகூட்டம்' மூலம் தமிழ் திரைப்பட உலகில் காலடி எடுத்து வைத்த ஸ்ரீகாந்த், பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது சசி இயக்கத்தில் 'ம்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ஸ்ரீகாந்த்தின் திருமணம் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட ஒன்று என்றாலும், இரு குடும்பத்தினரும் ஏற்கனவே அறிமுகம் ஆனவர்கள்தானாம்.
தொகுப்பு: கேடிஸ்ரீ |