கணிதப்புதிர்கள்
1. மாணவர்கள் 1,2,3 என்று வரிசையாக நின்று கொண்டிருந்தனர். அதில் முதலிலிருந்து எண்ணி வந்தாலும், இறுதியிலிருந்து எண்ணி வந்தாலும் பாலு 19வது ஆளாக நின்று கொண்டிருந்தான் என்றால், அந்த வரிசையில் நின்று கொண்டிருந்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

2. A,B,C,D என்ற நான்கு எண்களின் கூட்டுத் தொகை 1260. அதில் முதல் எண்ணை 5-ஆல் பெருக்கினாலும், இரண்டாம் எண்ணை 5-ஆல் வகுத்தாலும், மூன்றாம் எண்ணோடு 5-ஐக் கூட்டினாலும், நான்காம் எண்ணில் இருந்து ஐந்தைக் கழித்தாலும் வரும் தொகை அனைத்தும் ஒரே மாதிரி அமையும் என்றால் அந்த எண்கள் யாவை?

3. தொடர்ச்சியான 9 வீட்டு எண்களின் கூட்டுத் தொகை 5175. அதில் மிகச் சிறிய எண் என்னவாக இருக்கும்? மிகப் பெரிய எண் என்னவாக இருக்கும்?

4. சில கிளிகள் வானில் பறந்து கொண்டி ருந்தன. கீழே சில அழகான கூண்டுகள் இருப்பதைப் பார்த்தன. கிளிகள் கூண்டுக்கு ஒன்றாக அமர, ஒரு கிளி மிஞ்சியது. கூண்டுக்கு இரண்டாக அமர ஒரு கூண்டு மிஞ்சியது.

கிளிகள் எத்தனை? கூண்டுகள் எத்தனை?

5. 2178, 21978 இவற்றை நான்கால் பெருக்கினால் வரும் விடையிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்வது என்ன?

அரவிந்த் சுவாமிநாதன்

விடைகள்

© TamilOnline.com